விழுப்புரம் மாவட்ட காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்ட காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-18 18:45 GMT

விழுப்புரம் மாவட்டத்திற்கு காஜி நியமனம் செய்யப்பட உள்ளது. காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆலிம் படிப்பு அல்லது பாசில் படிப்பு அல்லது இஸ்லாமிய சட்ட சாத்திரத்தில் புலமை பெற்றவர்கள் அல்லது அரபுக்கல்லூரியிலோ, அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மேற்கண்ட தகுதியுடையவர்களாக இருப்பின் விண்ணப்பங்கள் மற்றும் சுயவிவரம் குறித்த விவரங்களை எழுத்து மூலமாக உரிய சான்றுகளுடன் 30.11.2023-க்குள் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் கூடுதல் விவரங்கள் தேவையெனில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்