மத்திய அரசின் தேசிய நீர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் தேசிய நீர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-12 18:03 GMT

புதுமையான முறையில் நிலத்தடி நீர் சேமிப்பு, மழைநீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி செய்தல் மற்றும் இதர முறையில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தால் 4-வது தேசிய நீர் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருது சிறந்த மாவட்டம், சிறந்த கிராம ஊராட்சி, சிறந்த நகர்புற உள்ளாட்சி அமைப்பு, சிறந்த ஊடகம் (அச்சு மற்றும் மின்னணு), சிறந்த பள்ளி, வளாக பயன்பாட்டிற்கான சிறந்த நிறுவனம், சிறந்த தொழில் நிறுவனம், சிறந்த அரசு சாரா நிறுவனம், சிறந்த நீர் பயனர் சங்கம், கூட்டாண்மை சமூக பொறுப்பு நடவடிக்கைக்கான சிறந்த தொழில் நிறுவனம் போன்ற இனங்களில் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் பெற www.awards.gov.in அல்லது www.jalshakti-dowr.gov.in என்ற இணையதளம் வாயிலாக நாளை மறுநாளுக்குள் (வியாழக்கிழமை) விண்ணப்பிக்கலாம். எனவே இதன்மூலம் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோர்கள் விருதுக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்