ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-25 19:00 GMT


மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் என்ற அமைப்பு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் 1 பல்நோக்கு பெண் உதவியாளர் மற்றும் காவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. உதவியாளர் பணிக்கு எழுத, படிக்க மற்றும் சமையல் தெரிந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.6,400. மேலும் 1 காவலர் பணியிடத்திற்கு முன்னாள் ராணுவ பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சம்பளம் ரூ.10,000. ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த, 24 மணிநேர சுழற்சி பணியாற்ற தயாராக உள்ளவர்கள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்