வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் தாட்கோ மூலம் வெளிநாடு சென்று புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயில தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-08-24 18:45 GMT

விருதுநகர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் தாட்கோ மூலம் வெளிநாடு சென்று புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயில தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தாட்கோ

இது பற்றி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கிறிஸ்தவ மதம் மாறிய இனத்தவர் வெளிநாடு சென்று புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட ஜிமேட், ஜெ.ஆர்.இ, டோபல் டீட்ஸ் போன்ற தகுதி தேர்வுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் தாட்கோ வழங்குகிறது. அதன் அடிப்படையில் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தகுதிகள்

ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். பிளஸ்-2 மற்றும் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்ஜினீயரிங், வேளாண்மை அறிவியல், பண்பாட்டு அறிவியல், சர்வதேச வர்த்தகம், பொருளாதார கணக்கியல், நிதி, மனித நேயம், சமூக அறிவியல், நுண் கலை சட்டம், கலை மற்றும் அறிவியல் போன்ற படிப்புகளை வெளிநாடுகளில் பயில விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும்.

குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் தான் விரும்பும் நாடுகளில் உள்ள கல்வி நிறுவனத்தில் மேற்படிப்படிப்பு தொடர வாய்ப்பு பெறலாம். இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்