சிமெண்டு விற்பனை முகவராக விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் சிமெண்டு விற்பனை முகவராக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாருட தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-04 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் சிமெண்டு விற்பனை முகவராக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாருட தெரிவித்துள்ளார்.

சிமெண்டு விற்பனை முகவர்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமெண்டு விற்பனை முகவர் திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராகவும் மற்றும் இதர கட்டுமான பொருட்கள் விற்பனை செய்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக வயது வரம்பு 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.

திட்டத்தொகை

திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியம் அளிக்கப்படும்.

இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், நாகை பைபாஸ் ரோடு, திருவாரூர் என்ற முகவரியிலும், 04366- 250017 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்