செங்கல்பட்டு மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-13 09:25 GMT

இ-சேவை மையம்

செங்கல்பட்டு மாவட்ட கலெட்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 390 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து மக்களின் சிரமத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

30-ந்தேதி கடைசி நாள்

இந்த திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்திட https://tnesevai.tn.gov.in/ அல்லது https://.tnega.tn.gov.in/ என்ற இணைய முகவரியை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் 30-06-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3,000 மற்றும் நகர்புறத்திற்கான கட்டணம் ரூ.6,000 ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பதாரர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.

மேலும், அருகிலுள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை ''முகவரி'' ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பயன்படுத்திக் காணலாம் அல்லது https://.tnega.tn.gov.in இணையதளத்தில் காணலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்