மேல்முறையீட்டு மனுக்களை தனிகவனம் செலுத்தி பரிசீலிக்க வேண்டும்
மகளின் உரிமை தொகை திட்டத்தில்மேல்முறையீட்டு விண்ணப்பங்களை தனிக் கவனம் செலுத்தி அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவுறுத்தினர்.;
ஆய்வு கூட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஜெயசீலன் முன்னிலையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெறப்படும் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை பரிசீலனை செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் தெரிவித்ததாவது:-
தனிக்கவனம்
தமிழக முதல்-அமைச்சரால் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் மாதாந்தோறும் ரூபாய் ஆயிரம் பெற்று வரும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான மகளிர் இருப்பின் அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அனைத்து அரசு அலுவலர்களும் இந்த விண்ணப்பங்களை தனிக்கவனம் செலுத்தி பரிசீலனை செய்ய வேண்டும்.
மகளின் உரிமை தொகை திட்டத்தில்மேல்முறையீட்டு விண்ணப்பங்களை தனிக் கவனம் செலுத்தி அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவுறுத்தினர்.
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்வதில் சிறு தவறு கூட மிகப் பெரிய தவறாக புரிதலை ஏற்படுத்தி விடும். மாவட்டத்தில் தற்போது வரை மறுபரிசீலனைக்காக சுமார் 28 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து விண்ணப்பங்களை தனித்தனியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
நிராகரிக்கும் விண்ணப்பங்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்க வேண்டும் மேலும் தகுதியான எந்த ஒரு பயனாளியும் விடுபட்டு விடாமல் இத்திட்டத்தில் பயனடைய செய்ய வேண்டும் இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், ஆர்.டி.ஓ.க்கள் சிவகாசிவிஸ்வநாதன், சாத்தூர்சிவக்குமார் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.