தையல் பயிற்சி அளிக்க விடாமல் மனைவியிடம் தகராறு செய்தவர் மீது வழக்கு
தேனி அருகே தையல் பயிற்சி அளிக்க விடாமல் மனைவியிடம் தகராறு செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி அருகே டொம்புச்சேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருடைய மனைவி அனுசுயாதேவி. இவர் தனது வீட்டில் தையல் எந்திரங்கள் வைத்து பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்து வருகிறார். ஆனால், அவருடைய கணவர், தையல் பயிற்சி அளிக்க விடாமல் வீட்டின் மின் இணைப்பை அடிக்கடி துண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தர்மலிங்கம் தனது மனைவியிடம் அரிவாளை காட்டி தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அனுசுயாதேவி புகார் செய்தார். அதன்பேரில் தர்மலிங்கம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.