புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சங்கராபுரம் பாலிடெக்னிக் கல்லூரியில் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
சங்கராபுரம்,
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சேட்டு தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முஸ்தபா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலை வைத்தனர். புகையிலை ஒழிப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவகங்கா வரவேற்றார். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா கலந்து கொண்டு தமிழக அரசால் தடை செய்ய்ப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் பற்றியும், அதனை ஒழிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கி கூறி மாணவர்களிடம் விழ்ப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் போலீஸ் ஏட்டு புருஷோத்தமன் சிங், கல்லூரி முதல்வரின் நேர்முக உதவியாளர் சரவணன், பொருளாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.