போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2023-03-29 18:45 GMT

ஊட்டி, 

தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில், போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று ஊட்டியில் நடைபெற்றது. பேரணியை நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன், ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு யசோதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் 500 பேர் கலந்துகொண்டு ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இருந்து பஸ் நிலையம் வரை பேரணியாக சென்றனர்.

அப்போது போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தியபடி கோஷமிட்டனர். முடிவில் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பேரணிக்கு முன்னதாக ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து சென்றன. இதில் அரசு கல்லூரி முதல்வர் சணில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சங்க தலைவர் ஹக்கீம், இன்ஸ்பெக்டர் மணிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் வின்சென்ட், வனக்குமார், கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்