போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்
போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
புதுக்கோட்டையில் போதைக்கு எதிராக பள்ளி மாணவ-மாணவிகள், சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலத்தை கொடியசைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் தொடங்கி வைத்தார். ஊர்வலம் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே முடிவடைந்தது. இதில் ஊர்வலத்தில் மாணவிகளை படத்தில் காணலாம். போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்