போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;
கே.வி.குப்பத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தாசில்தார் கீதா தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு தலைவர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல்பனா, இ.கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். ஊர்வலம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காட்பாடி - குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நிறைவடைந்தது.
ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டபடி சென்றனர். ஊர்வலத்தில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, நகர மன்ற உறுப்பினர் மேகநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.