ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் நேற்று முன்தினம் முதல் வருகிற 5-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, பிரதான அலுவலகங்களில் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. மேலும் பெரம்பலூரில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் பெரம்பலூரில் பிரதான சாலைகள் வழியாக சென்று புதிய பஸ் நிலையம் முன்பு முடிவடைந்தது. ஊர்வலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, விஜயலெட்சுமி மற்றும் போலீசார், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.