ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

மயிலாடுதுறையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

Update: 2022-11-06 18:45 GMT

நாடு முழுவதும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 31-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மயிலாடுதுறை நகரில் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், ெரயில்வே நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஊழல் தடுப்பு வாரத்தின் கடைசி நாளான நேற்று மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரியா தலைமையிலான போலீசார், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து அந்த துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறும்படத்தை டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பினர். தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரியா பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, லஞ்சம் கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் பற்றி புகார் தெரிவிக்க அறிவுறுத்தினார். இதில் மயிலாடுதுறை சட்ட ஒழுங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்