குழந்தை கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

கடையநல்லூரில் குழந்தை கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2022-07-30 14:47 GMT

கடையநல்லூர்:

நெல்லை மனித உரிமை கல்வி மற்றும் காப்புக்களம் சார்பில் குழந்தை கடத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதையொட்டி கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமிற்கு மாவட்ட சமூக நல அலுவலர் முத்து மாரியப்பன் தலைமை தாங்கினார். களப்பணியாளர் வேலம்மாள் வரவேற்றார். இயக்குனர் பரதன் பேசினார். பட்டதாரி ஆசிரியை திரேஸ் விஜயராணி, சகி ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஜெயராணி, மூத்த ஆலோசகர் ராஜம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். களப்பணியாளர் தங்கம் நன்றி கூறினார்.



Tags:    

மேலும் செய்திகள்