கொடுஞ்செயல் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊா்வலம்

முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊா்வலம்

Update: 2023-06-16 18:45 GMT


முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் விழிப்புணர்வு ஊா்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்திய குடிமக்களாகிய நாங்கள் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன்.

மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன். மேலும் பொது இடங்களான ஆஸ்பத்திரி, வங்கி, பஸ் போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்திட பாடுபடுவேன் என உறுதி கூறுகிறேன் என்று கலெக்டர் சாருஸ்ரீ உறுதி மொழி வாசிக்க தன்னார்வ தொண்டு நிறுவன மகளிர் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த ஊர்வலமானது திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கி பழைய பஸ் நிலையம், தெற்குவீதி வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவன மகளிர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பணிகள் திட்ட அலுவலர் ஜோஸ்பின் சகாய பிரமிளா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்