நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்குப்பொய்கைநல்லூரில் வேளாங்கண்ணி பேராலயத்தின் உபகோவிலான பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு திருவிழா கடந்த மாதம் (ஜூலை) 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தேர் பவனி நடந்தது. முன்னதாக ஆலயத்தில் வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மிக்கேல் சம்மனசு, புனித அந்தோணியார், மாதா சொரூபங்கள் எழுந்தருள செய்யப்பட்டது. பின்னர் பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தேரை புனிதம் செய்து பவனியை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்து கொண்டனர்.