அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 41.6 மி.மீ மழை

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 41.6 மி.மீ மழை பதிவானது.

Update: 2023-09-22 21:45 GMT

அந்தியூர்

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியின் அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு உயரம் 33.46 அடியாக கணக்கிடப்படுகிறது. பர்கூர் மலைப்பகுதியில் பெய்யும் மழை நீரானது கும்பரவாணி பள்ளம், கல்லுப்பள்ளம், வரட்டுப்பள்ளம் வழியாக வரட்டுப்பள்ளம் அணைக்கு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் 12 மணி வரை 2 மணி நேரம் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் நேற்று முன்தினம் 41.6 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 21 அடியாக இருந்தது. மழை காரணமாக நேற்று காலை 6 மணி அளவில் அணையின் நீா்மட்டம் 21.69 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 31 கன அடி தண்ணீர் வந்தது. இதேபோல் தொடர்ந்து மழை பெய்தால் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் விரைவில் உயர்ந்துவிடும் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்