நாட்டு வெடிகுண்டு வைத்த மேலும் ஒருவர் கைது
நாட்டு வெடிகுண்டு வைத்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தில் ரிங்கர் தீர்த்தம் அருகே காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்தனர். அது வெடித்ததில் காட்டுப்பன்றி இறந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி கோபிநாத் (வயது 20) என்பவரை கைது செய்தனர். அப்போது அங்கிருந்த கார்த்திக் ராஜா (23) தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர் இந்தநிலையில் கார்த்திக் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.