தீபாவளியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையான இன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என அறிவிப்பு

பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவார்கள் என்பதால் ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-11-05 02:11 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தீபாவளி பண்டிகை வரும் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு 5-ந்தேதி (இன்று) ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசின் உணவுத்துறை சார்பில் முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி வாரத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தீபாவளிக்காக பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவார்கள் என்பதால் ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன. எனவே பொதுமக்கள், ரேஷன் பொருட்களை இன்றும் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்