ஓய்வு பெற்ற சிறை பணியாளர்கள் நலச்சங்க ஆண்டு விழா

ஓய்வு பெற்ற சிறை பணியாளர்கள் நலச்சங்க ஆண்டு விழா நடந்தது

Update: 2022-10-11 21:22 GMT

நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற சிறை பணியாளர்கள் நலச்சங்க 12-வது ஆண்டு தொடக்க விழா நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் பொன்னம்பலம் தலைமை தாங்கினார். கவுரவ ஆலோசகர் மார்சல் கருணாகரன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை சரக சிறைத்துறை துணைத்தலைவர் கனகராஜ், மதுரை சரக துணைத்தலைவர் பழனி, பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் சங்கர், மத்திய, மாநில உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை ஓய்வூதிய சங்க கூட்டமைப்பு தலைவர் முத்துசாமி, ஓய்வூதியர் சங்கம் சீதாராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :-

குடும்ப ஓய்வூதியம் பெறும் நடைமுறையை எளிமைபடுத்தி உத்தரவிட்டதற்கும், 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க உத்தரவிட்டதற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஓய்வூதியர்களுக்கான மாதாந்திர மருத்துவ படியை ரூ.1,000 ஆக உயர்த்த வேண்டும். குடும்ப நல நிதியை ரூ.1.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். சென்னையில் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் கட்டண சலுகை வழங்குவது போல் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இந்த திட்டத்தை தமிழகம் எங்கும் விரிவு படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்