"அண்ணாவின் கனவு திட்டம் சேது சமுத்திரத் திட்டம்" சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம்

அண்ணாவின் கனவு திட்டம் சேது சமுத்திரத் திட்டம், இந்த திட்டத்திற்கான தீர்மானத்தை முன்மொழிகிறேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2023-01-12 06:05 GMT

சென்னை,

புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு பேரவையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய தமிழக முதல்-அமைச்சர்மு.க. ஸ்டாலின்,

1967-ல் ஆட்சிக்கு வந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா அவர்கள் சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். அண்ணாவின் கனவு திட்டம் சேது சமுத்திரத் திட்டம்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்த வாஜ்பாய் சாத்தியக் கூறு ஆய்வுகளுக்கு அனுமதி அளித்தார். ஆனால், அரசியல் காரணங்களுக்காக பாஜக இந்த திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டது.

2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலையிலான மத்திய அரசு அமைந்த போது திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது. அரசியல் காரணமாக சேது சமுத்திர திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது பாஜக.

ஆரம்பத்தில் திட்டத்தை ஆதரித்த ஜெயலலிதா திடீரென தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு எதிர்த்தார்.

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படாததற்கான அரசியல் காரணங்களை சொல்ல விரும்பவில்லை. சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்றினால் 50 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மாற்றுப்பாதையை கண்டறிந்து சேது சமுத்திர திட்டத்தை பாஜக நிறைவேற்றவில்லை. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக எண்ணுகிறது.

ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருப்பது எந்த மாதிரியான கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு மத்திய அரசுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும்.

சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் ரூ.2,427 கோடியில் தொடக்கப்பட்ட திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பயன்கள் கிடைக்கவில்லை. சேது அதன் துறைமுகங்களும் வளர்ச்சியடையும். சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் நிறைவேற்றவில்லையெனில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்