அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி

பாளையங்கோட்டையில் அண்ணா பிறந்த நாளையொட்டி சைக்கிள் போட்டி நடைபெற்றது.

Update: 2022-09-15 19:43 GMT

பாளையங்கோட்டையில் அண்ணா பிறந்த நாளையொட்டி சைக்கிள் போட்டி நடைபெற்றது.

சைக்கிள் போட்டி

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நெல்லை மாவட்ட அளவிலான அண்ணா விரைவு சைக்கிள் போட்டி நேற்று நடைபெற்றது. பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து போட்டி தொடங்கியது. இதில் வயது அடிப்படையில் ஆண், பெண் என தனித்தனியாக 6 பிரிவுகளின் கீழ் போட்டி நடைபெற்றது.

இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் 10 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சமாக 20 கிலோ மீட்டர் வரை சைக்கிள் ஓட்டினர். ஐகிரவுண்டு ரவுண்டானா, வி.எம்.சத்திரம், கிருஷ்ணாபுரம் வழியாக இந்த போட்டிகள் நடைபெற்றது. இதில் 237 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்றோருக்கு காசோலை

இதில் 13 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில் கவின் சுர்ஜித், மாணவிகள் பிரிவில் ஆண்டிரியா பிஜெல், 15 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் தீனா ரீசன், மாணவிகள் பிரிவில் பிரிஷா ராணி, 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் ராஜன் சுமித், மாணவிகள் பிரிவில் விமலரசி ஆகியோர் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். ஒவ்வொரு பிரிவிலும் தலா 3 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பயிற்சியாளர்கள் குமர மணிமாறன், பழனி விக்னேஷ், அமர்நாத், அருள் போஸ், சத்யகுமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், பொது மக்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்