அண்ணா பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2024-09-15 04:42 GMT

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரையின் 116-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்., மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அண்ணா உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்