அவதூறாக பேசிய புகாரில் ஆர்.எஸ் பாரதிக்கு அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ்
அவதூறாக பேசிய புகாரில் ஆர்.எஸ் பாரதி மன்னிப்பு கேட்கக்கோரி அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ்
சென்னை,
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக பிரமுகர்களின் சொத்துப்பட்டியல் எனக் கூறி ஒரு பட்டியலை வெளியிட்டார். இதனை திமுக முற்றிலும் மறுத்த நிலையில், அண்ணாமலைக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த திமுக அமைப்புச்செயலாளர் ஆர். எஸ்.பாரதி, ஆருத்ரா முறைகேடு விவகாரத்தில் அண்ணாமலை ரூ.84 கோடி பெற்றதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், ஆருத்ரா முறைகேடு விவகாரத்தில் ரூ.84 கோடி பெற்றதாக ஆர்.எஸ்.பாரதி கூறியதை அண்ணாமலை மறுத்துள்ளார். மேலும், அவதூறாக பேசிய புகாரில் ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்கவேண்டும் என அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மன்னிப்பு கேட்காவிட்டால், இல்லையெனில் ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை மறுத்தால், ஆர்.எஸ்.பாரதி மீது கிரிமினல், சிவில் வழக்கு தொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.