விஸ்வநாதர் கோவிலில் அன்ன வாகன வெள்ளோட்டம்

விஸ்வநாதர் கோவிலில் அன்ன வாகன வெள்ளோட்டம் நடந்தது.;

Update:2023-08-12 00:44 IST

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் அம்மன் வீதி உலாவிற்காக புதிதாக அன்ன வாகனம் செய்யப்பட்டு, அதன் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மேலும் சிறப்பு வேள்வி நடைபெற்றது. சுவாமி, அம்பாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் புதிதாக செய்யப்பட்ட அன்ன வாகனத்துக்கு மகா சம்ப்ரோஷணம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கோவிலில் பிரகாரப் பிரதட்சணம் நடைபெற்றது. பின்னர் அன்ன வாகனம் ராஜவீதிகள் வழியாக வெள்ளோட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்