அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம்
நாங்குநேரி அருகே அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நடந்தது.
இட்டமொழி:
நாங்குநேரி அருகே உள்ள அரியகுளத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி வசந்தகுமார் தலைமை தாங்கினார். நாங்குநேரி சமூக பாதுகாப்பு தாசில்தார் தங்கராஜ், மண்டல துணை தாசில்தார் மாரிமுத்துகுமார், ஒன்றிய கவுன்சிலர் செந்தூர்பாண்டியன், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் கவிதா, சித்ரா, சிங்காரவேலன், சேர்மன்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மேலஅரியகுளம் தொடக்கப்பள்ளியில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமையும் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி வசந்தகுமார் தொடங்கி வைத்தார்.