அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம்
பரப்பாடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நடந்தது.
இட்டமொழி:
பரப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நாங்குனேரி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தங்கராஜ், மண்டல துணை தாசில்தார் மாரிமுத்துகுமார், வருவாய் ஆய்வாளர் மாரிதுரை, கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணம்மாள், கிராம உதவியாளர் செந்தில்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி, ஊராட்சி துணைத்தலைவர் விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.