அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி
நாகையில் நடந்த அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியில் 203 பேர் கலந்து கொண்டனர்.;
நெடுந்தூர ஓட்டப்போட்டி
நாகை மீன்வள பல்கலைக்கழகம் எதிரே அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், கொடியசைத்து தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து உத்தமசோழபுரம் வரை ஓட்டப்போட்டி நடந்தது.
17 வயது முதல் 25 வயது வரை மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 2 பிரிவுகளாக ஆண்கள், பெண்களுக்கு என்று தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது.
203 பேர் பங்கேற்பு
17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ. தூரமும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. தூரமும், 17 முதல் 25 வயது வயதிற்குட்பட்ட மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் நடத்தப்பட்டது. போட்டியில் 128 ஆண்கள், 75 பெண்கள் என மொத்தம் 203 பேர் கலந்து கொண்டனர்.இந்த ஓட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும் மற்றும் 4 முதல் 10-ம் இடம் வரை பெற்றவர்களுக்கு தலா ரூ.1,000 என மொத்தம் ரூ.68 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படுகிறது.
வங்கி கணக்கில் வரவு வைப்பு
இந்த பரிசு தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணன், மாவட்ட விளையாட்டுப் பிரிவு கூடைப்பந்து பயிற்றுனர் வடிவேல் முருகன், பள்ளி உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், போலீஸ் துறை, மருத்துவத் துறையை சேர்ந்த அதிகாரிகள மற்றும் பொதுமக்கள் பலர் கொண்டனர்.