அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புத்தகங்களை வீடுகளுக்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதி

நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கை பெற்றவர்கள், நூல்களை வெளியே எடுத்துச் செல்லலாம்

Update: 2024-03-08 11:40 GMT

சென்னை,

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள நூல்களை படிப்பதற்காக வெளியே எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கை பெற்றவர்கள், நூல்களை வெளியே எடுத்துச் செல்லலாம். 30 நாள்களில் திருப்பி அளிக்க வேண்டுமென்ற அறிவுறுத்தலில் நூல்கள் வழங்கப்பட உள்ளன.

11ம் தேதி முதல் புத்தகங்களை உறுப்பினர்கள் எடுத்துச் செல்லலாம். 2 முறை புதுப்பித்தல் (Renewable) செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . 6 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் நூலத்தில் உள்ள நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேலான புத்தகங்கள் வெளியே எடுத்துச் சென்று படிக்க அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்