ஆஞ்சநேயர் கோவில் திருவிழா

ஆண்டிப்பட்டியில் ஆஞ்சநேயர் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2023-04-23 18:45 GMT

ஆண்டிப்பட்டி மேற்கு ஓடை தெருவில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 21 -ந்தேதி திருமஞ்சனகுடம் அழைத்து வந்து வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதைத்ெதாடர்ந்து மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் கோவில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதன்பின்னர் பக்தர்கள் அலகுகள் குத்தி காவடி எடுத்தும், தீச்சட்டி மற்றும் பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து நேற்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்