கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

Update: 2022-12-28 20:04 GMT

அம்மாப்பேட்டை ஒன்றியம் திருபுவனம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது. அருந்தவபுரம் கால்நடை உதவி மருத்துவர் சோபன்ராஜ் மேற்பார்வையில் கால்நடை உதவி மருத்துவர்கள் கனகாதேவி, சவுந்தர்ராஜ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். முகாமில்

சிறந்த கால்நடைகள் மற்றும் கிடேரி கன்றுக்கான பரிசுகளை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் வழங்கினார். முகாமில் 75 மாடுகள், 50 கோழிகள் மற்றும் 30 ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கால்நடைதுறையினர் மற்றும் திருபுவனம் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்