கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
குன்னூர் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
குன்னூர்,
நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் குன்னூர் அருகே பெட்டட்டி கிராமத்தில் நடைபெற்றது. முகாமை ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம் தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு பல்வேறு நோய் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்கம், சினை பரிசோதனை, சிறு அறுவை சிகிச்சை, தாது உப்புகள் வழங்குதல் போன்ற சிகிச்சைகள் நடைபெற்றன. முகாமில் சிறந்த கிடாரிகளுக்கும், கால்நடை பராமரிப்பு மேலாண்மைக்காகவும் 6 பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் எடப்பள்ளி கால்நடை டாக்டர் சதிஷ் குமார், ஜெகதளா கால்நடை உதவி டாக்டர் பிரியதர்சினி, கால்நடை நோய் தடுப்பு மற்றும் புலானாய்வு பிரிவு டாக்டர் ரேவதி, கால்நடை ஆய்வாளர்கள் தியாகராஜன், சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.