அங்கன்வாடி ஊழியர்களை செவிலியர் பயிற்சிக்கு அனுப்பக்கூடாது
அங்கன்வாடி ஊழியர்களை கிராம செவிலியர் பயிற்சிக்கு அனுப்பக்கூடாது என்று நீலகிரி மாவட்ட பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஊட்டி
அங்கன்வாடி ஊழியர்களை கிராம செவிலியர் பயிற்சிக்கு அனுப்பக்கூடாது என்று நீலகிரி மாவட்ட பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமையல் கியாஸ் சிலிண்டர்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட 3-வது பொது பேரவை மாநாடு ஊட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மூத்த உறுப்பினர் லதா தலைமை தாங்கி, பேரவை கொடியை ஏற்றி வைத்தார். மாநில துணை தலைவர் சித்ரா கலந்துகொண்டு பேசினார். அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நீலகிரி மாவட்ட தலைவராக கவிதா, பொதுச்செயலாளராக சசிகலா, பொருளாளராக சந்திரலேகா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 9 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில் அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தவுடன், பொது மைய ஊழியர்களின் ஊதியத்தை சர்வீசுடன் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் இலவசமாக வழங்க வேண்டும். பழுதடைந்த செல்போனுக்கு பதிலாக புதிய செல்போன் வழங்க வேண்டும். சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது.
கோடை விடுமுறை
ஊதியத்திற்கு அதிகமாக தொழில் வரி பிடித்தம் செய்யக்கூடாது. தொழில் வரி பற்றிய விவரம் வேண்டும். ஊட்டச்சத்து செலவுகளை அரசு ஏற்க வேண்டும். சாக்குப்பை சேகரிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை கிராம செவிலியர் பயிற்சிக்கு அனுப்புவதை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அனுப்பும் மையங்களுக்கு, பிற மையங்களில் இருந்து ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கக்கூடாது. மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும்.
பதவி உயர்வு இல்லாத பட்சத்தில் சத்துணவு அமைப்பாளராக பணி இடமாற்றம் செய்ய வேண்டும்என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் மாவட்ட சி.ஐ.டி.யு. பொறுப்பாளர் சுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.