அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மதுரையில் அங்கன்வாடி ஊழியர் அம்சவள்ளி, அதிகாரி மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணமான அதிகாரியை கண்டித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தவமணி தலைமை தாங்கினார். செயலாளர் பிரேமா முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அங்கன்வாடி ஊழியர் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.