அங்கன்வாடி ஊழியர்கள்- உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள்- உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-28 19:20 GMT

பெரம்பலூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், வெங்கடேசபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் விடுமுறை வழங்க வேண்டும். ஊட்டச்சத்து மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்களை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ேமனகா தலைமை தாங்கினார். இதில் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட தலைநகரில் மாலை நேர தர்ணா போராட்டமும், 25-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டமும் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தலைவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்