அங்கன்வாடி கட்டுமான பணிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு

விளாத்திகுளம் பள்ளியில் அங்கன்வாடி கட்டுமான பணிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Update: 2022-10-29 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பில் அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு பணிகளை விரைவில் முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, விளாத்திகுளம் மேற்கு தி.மு.க ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், வார்டு செயலாளர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் பாரதியார் பஸ்நிலையம் அருகே ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுகாதார வளாகம் கட்டுமான பணிகளையும் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

ஆய்வின் போது விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல் உள்பட பலர் உடனிருந்தனர். அதனை தொடர்ந்து ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் சார்பாக மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்