ரூ.22 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம்; கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

எட்டயபுரம் பகுதியில் ரூ.22 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

Update: 2023-05-27 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் 3-வது வார்டு காலனி தெருவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி மாவட்ட மருத்துவமனை இணைச் செயலாளர் டாக்டர் சவுந்தர்ராஜன், புதூர் மத்திய ஒன்றிய தி.மு.க செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து எட்டயபுரம் நடுவிற்பட்டி அய்யம்பெருமாள் முதலியார் தெருவில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக விளாத்திகுளம் யூனியன் பிள்ளையார் நத்தம் கிராமத்தில் உள்ளூர் தொகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.50 மதிப்பீட்டில் கட்டப்பட்ட பஸ்நிறுத்த கட்டிடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்