வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த ராஜாளிகாடு அங்காள பரமேஸ்வரி கோவில் திருவிழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால் காவடிகள் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி, வீதிஉலா காட்சி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.