பள்ளி மாணவிகளுக்கு ரத்த சோகை கண்டறியும் முகாம்

உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு ரத்த சோகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.

Update: 2022-12-13 19:02 GMT

கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் வளரிளம் மாணவிகளிடையே ரத்தசோகை கண்டறியும் ஆய்வு முகாமினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த திட்டத்தின் கீழ் 9-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவிகளுக்கு உதிரத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு கண்டறியப்படவுள்ளது. வாரம், வாரம் இரும்பு சத்து மாத்திரைகள் மட்டுமே வழங்கக்கூடிய திட்டம் இருக்கிறது. நாட்டிலே முதல் முறையாக நம்முடைய மாவட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவிகளின் ஹீமோகுளோபின் அளவுகளை பரிசோதித்து பின் அவர்களுக்கு ஏற்ற வகையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு குழந்தைகளின் ரத்தம் எடுப்பதனால் மொத்தம் 26 ஆயிரம் மாணவிகளின் பெற்றோர்களின் அனுமதியை கேட்டறிந்து விண்ணப்பம் தெரிவித்தோம். அதில் 16,792 குழந்தைகளின் பெற்றோர் இதற்கு சம்மதம் தெரிவித்து குழந்தைகளிடம் ஒப்புதலும் பெறப்படுகிறது. அதாவது 165 பள்ளிகளில் 125 அரசு பள்ளிகள், 40 தனியார் பள்ளிகளில் இந்த ரத்தசோகை கண்டறியும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகள் தொடர்ந்து 15 நாட்கள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 9,250 மாணவிகளுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்