துணை ஜனாதிபதியாக பணியாற்றி ஓய்வு பெறும் வெங்கையா நாயுடுவுக்கு, அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

துணை ஜனாதிபதியாகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெறும் வெங்கையா நாயுடுவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து கூறியுள்ளார்.

Update: 2022-08-10 08:15 GMT

சென்னை,

பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

துணை ஜனாதிபதியாகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் வெங்கையா நாயுடுவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பா.ம.க. தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

துணை ஜனாதிபதியாக மிகச்சிறந்த முறையில் பணியாற்றி, உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக இந்த சந்திப்பின் போது வெங்கையா நாயுடுவுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்