திமுக தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

திமுக தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-09 08:59 GMT

சென்னை,

15-வது திமுக பொதுக்குழு கூட்டம் இன்று அமைந்தகரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், திமுக தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கும் வாழ்த்துகள். அவர்கள் பணி சிறக்கட்டும்!

திமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு நீர்வளத்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்