எரியாத உயர்கோபுர மின்விளக்கு
எரியாத உயர்கோபுர மின்விளக்கை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் நகராட்சி 8-வது வார்டு ஜின்னாவீதி 3-வது தெரு மீலாது சவுகு ரவுண்டானா பகுதியில் கடந்தசில மாதங்களாக உயர்கோபுர மின்விளக்குகள் எரியவில்லை. அந்த மின்விளக்குகளை கீழே இறக்கி வைத்துள்ளனர். அதை பழுது நீக்கி உயரத்தில் பொருத்தி எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.