செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டி தீக்குளிக்க முயன்றார்.

Update: 2022-08-09 11:48 GMT

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த வீரபோகம் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணி (வயது 70). இவர் நேற்று செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்திருந்தார். அப்போது திடீரென தனது பையில் வைத்திருந்த மண்எண்ணெய்யை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதை பார்த்த அங்கு பாதுகாப்புக்காக இருந்த போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கல்யாணிக்கு சொந்தமாக வீரபோகம் கிராமத்தில் 8 சென்ட் நிலம் இருந்ததாகவும், இதனை தனது மகன் வழி பேரனான ஞானசேகர் என்பவர் அந்த பகுதி வி.ஏ.ஓ. உதவியுடன் அவரது பெயருக்கு பட்டாவை மாற்றிக்கொண்டதாகவும், யாரும் பார்த்து கொள்ளாததால் அந்த நிலத்தை விற்பனை செய்ய முயன்ற போது உண்மை தெரிய வந்ததாக கூறினார். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்