வேட்டியில் தீப்பிடித்து முதியவர் சாவு

வேட்டியில் தீப்பிடித்து முதியவர் இறந்தார்.

Update: 2022-10-06 18:26 GMT

விராலிமலை:

விராலிமலை தாலுகா கொடும்பாளூர் இடையபட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (வயது 80). இவர், புகைபிடிக்கும் பழக்கம் உடையவர். இந்நிலையில், நேற்று முன்தினம் இவர், வீட்டில் இருந்தபோது `சிகரெட்' பிடிப்பதற்காக தீப்ெபட்டியில் இருந்து தீக்குச்சியை எடுத்து பற்றவைத்து விட்டு குச்சியை கீழே போட்டுள்ளார். அப்போது தீக்குச்சி எதிர்பாராதவிதமாக அவரது வேட்டியில் பட்டு மளமளவென தீப்பிடித்தது. இதையடுத்து அவர் கீழே விழுந்து புரண்டு அலறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் ஓடி வந்து தீக்காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முதியவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்