ஓட்டல் மாடியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற ஊழியர்
ஓட்டல் மாடியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற ஊழியர்
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்- ஊட்டி ரோட்டில் தனியார் ஓட்டல் உள்ளது. இங்கு கடந்த ஒரு ஆண்டாக குன்னூர் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு திடீரென ஓட்டலின் மாடியில் ஏறி நின்று தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து சக ஊழியர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் முடிய வில்லை.
இது குறித்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம், மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள், மாடியில் ஏறி நின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவியை மீட்டனர். விசாரணையில் அவர், மனநல பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. ரவியை மீட்ட மேட்டுப்பாளையம் போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.