மொபட்டில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சாவு

மொபட்டில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-10-16 23:04 IST
மொபட்டில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சாவு

கரூர் ஆண்டாங்கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகையன் (வயது 52). தனியார் நிறுவன ஊழியரான இவர், சம்பவத்தன்று தனது மொபட்டில் கரூர்-கோவை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீேழ விழுந்த முருகையனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகையன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்