மலைப்பாதையில் சென்ற அரசு பஸ்சை விரட்டிய யானையால் பரபரப்பு

செங்கோட்டை அருகே மலைப்பாதையில் சென்ற அரசு பஸ்சை விரட்டிய யானையால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.;

Update:2022-11-10 00:15 IST

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே மலைப்பாதையில் சென்ற அரசு பஸ்சை விரட்டிய யானையால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.

கூட்டமாக நின்ற யானைகள்

தமிழக- கேரள எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேக்கரையில் இருந்து அச்சன்கோவிலுக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வழியாக செல்லும் சாலையில் யானை, கரடி, மான், மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி கடந்து செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று மேக்கரையில் இருந்து அச்சன்கோவிலுக்கு வனப்பகுதி வழியாக கேரள மாநில அரசு பஸ் சென்றபோது, சாலையோரம் யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. எனவே அவற்றின் ஓரமாக மெதுவாக கடந்து சென்று விடலாம் என்று கருதி, டிரைவர் பஸ்சை இயக்கினார்.

பயணிகள் அச்சம்

அப்போது கூட்டமாக நின்ற யானைகளில் ஒன்று திடீரென்று பஸ்சை நோக்கி ஓடி வந்து பிளிறியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினர். இதற்கிடையே யானை நெருங்குவதற்குள் பஸ்சை டிரைவர் வேகமாக ஓட்டிச் சென்றார். எனினும் சிறிதுதூரம் ஓடி வந்த யானை பின்னர் சாலையோரமாக நின்றது.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மேக்கரையில் இருந்து அச்சன்கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையானது அடர்வனம் நிறைந்த பகுதி என்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்