தூக்குப்போட்டு முட்டை வியாபாரி தற்கொலை
தூக்குப்போட்டு முட்டை வியாபாரி தற்கொலை
மெலட்டூர் அருகே நரியனூர் சாலையோரம் உள்ள மரத்தில் 50 வயது மதிக்கத்ததக்க ஒருவர் தூக்கில் பிணமாக கிடப்பதாக மெலட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த மெலட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் தூக்கில் பிணமா கிடந்தவர் பட்டீஸ்வரம் தெற்குத்தெருவை சேர்ந்த நாகராஜ்(வயது50) என்பதும், இவர் முட்டை வியாபாரம் செய்து வந்ததும், கடன் பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. பின்னர் நாகராஜ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.