கள்ளக்குறிச்சிக்கு சென்ற சாட்டை துரைமுருகனை தாக்க முயற்சி - வைரல் வீடியோ

அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Update: 2024-06-21 14:24 GMT

சென்னை,

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்ததில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

விஷ சாராய சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற கருணாபுரம் கிராமத்திற்கு சென்ற சாட்டை துரைமுருகனுக்கும் அந்த கிராம மக்கள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்தின்போது சாட்டை துரைமுருகனை அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட சாட்டை துரைமுருகன், தாக்க முயன்றவருடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் இருவரையும் சமாதானம் செய்த அப்பகுதி மக்கள், சாட்டை துரைமுருகனை காரில் அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்